கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முனையங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அகற்றி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக பல வாரங்களாக ஏற்பட்டுள்ள கொள்கலன் வாகனங்களின் வரிசை நேற்று பிற்பகலிலும் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் 29 முன்னணி வர்த்தக சபைகள் குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வுகள் உள்ளிட்ட முன்மொழிவை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளன.
இத்தகைய சூழலில், கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் நெரிசலை தீர்ப்பதற்கவே கூட்டு அறிக்கை மூலம் அரசாங்கத்திடம் குறித்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளன.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            