இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிலிருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர், தற்போதுள்ள டொலருக்கான கேள்வி குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.