கர்ப்பிணித் தாய்மாருக்கு விரைவில் 2500 ரூபா கொடுப்பனவு!

சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் முழு சொத்துரிமையில் 20 வீதத்தை வைப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.கர்ப்பிணித் தாய்மாருக்கு 2500 இடைக்கால கொடுப்பனவு வழங்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், நிவாரண உதவி வழங்கப்பட வேண்டிய 61000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10000ரூபாய் நிவாரண உதவி வழங்கும் வகையிலும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.மேலும் அரச வங்கிகளுக்கு விவசாயிகள் செலுத்த தவறிய 680 மில்லியன் ரூபா நிதியை தள்ளுபடி செய்யும் யோசனையினையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.