2021 30 செக்கன் ரீகேப் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்!

2021ம் நிறைவடைந்து விட்டது. இந்த 365 நாள் நம் வாழ்வில் நாம் பல மாற்றங்களை சந்தித்திருப்போம். பல விதமான அனுபவங்களை பெற்றிருப்போம். இந்த 2021ம் ஆண்டு நாம் கடந்து வந்த பாதையை நினைத்து பார்க்கும் போது புதிது புதிதாக பல விஷயங்கள் நம்மிடம் ஏற்பட்டிருக்கும். 

இப்படியாக சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது 2021ம் ஆண்டு நடந்த சம்பவங்களை ஒருங்கிணைத்து செய்யப்பட்ட மாஷ் அப் வீடியோ. அதில் 2021ம் ஆண்டு சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்கான வீடியோக்களை மொத்தமாக தொகுத்து மாஷ் அப் செய்துள்ளனர்.

இதில் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் வெற்றி, சிஎஸ்கே ஐபிஎல் போட்டியில் பெற்ற வெற்றி, நடிகர் விவேக், இயக்குநர் கே.வி ஆனந்த், முப்படை தளபதி பிபின் ராவத், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஆகியாரின் மரணம், மாநாடு, சார்பட்டா பரம்பரை, மாஸ்டர், ஜெய் பீம் ஆகிய திரைப்படங்களின் வெற்றி, ஜகமே தந்திரம், டிக்கிலோனா, எனிமி, புஷ்பா ஆகிய திரைபடங்களின் பாடல்களின் கதாநாயகிகளின் நடின அசைவுகள் வீடியோ, ஊ சொல்றியா பாடல், நடிகர் அஸ்வின் 40 கதை கேட்டு தூங்கிய கதை, ஸ்பைடர் மேன் , கூல் சுரேஷ், யாருடா நீங்க மீம், மாநாடு திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு, நடிகர் விஜய் சைக்கிளில் ஓட்டுப்போட போனது, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ஆர்யா பசுபதியை சைக்கிளில் கூட்டி செல்லும் காட்சி வைரல் மீம்மாக மாறியது, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டது, 83 திரைப்படம், நடிகர் தனுஷிற்கு தேசிய விருதுவழங்கப்பட்டது, ஸ்விகிட்கேம், மண்டேலா திரைப்படம், விக்ரம் திரைப்படத்தின் ஃபர்ட்லுக், காட்ஸில்லா திரைப்படம், வலிமை அப்டேட், வலிமை மேக்கிங் வீடியோவில் அஜித் பைக்கிலிருந்து கீழே விழுந்தது, மாநாடு ஆடியோ ரிலீஸில் சிம்பு அழுதது, இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல்ல என்ற மீம், புட்பால் போட்டியில் ரோனால்டோ கோக்ககோலா பாட்டிலை நகட்டி வைத்தது, வலிமை டிரைலர், ஆர், ஆர், ஆர் திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் செய்தது, பூமர் அங்கிள் வீடியோ, உள்ளிட்ட பல விஷயங்களை தொகுத்து வழங்கியுள்ளனர்.

வீடியோ லிங்க்: https://twitter.com/i/status/1476811097415974912