இருபதுக்கு 20 உலக கிண்ணம் : பயிற்சி போட்டியில் மே.தீவுகள் அணி வெற்றி

இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடருக்கான பயிற்சி போட்டியில், மே.தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இந்த வெற்றி, இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடருக்கான எதிர்பார்ப்புகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

மே.தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் குவித்தது. இது மே.தீவுகள் ஆடுகளங்களில் 200 ஓட்டங்கள் எடுப்பது கடினம் என்கிற நிலையில் அசத்திய சாதனையாகும்.
 
இதில் குறிப்பிடத்தக்க விதமாக, அதிரடி துடுப்பாட்ட வீரர் நிக்கோலஸ் பூரன் 25 பந்துகளில் 75 ஓட்டங்கள் விளாசி அசத்தினார்.  

இதேநேரம் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது.
டேவிட் வார்னர் 15 ஓட்டங்கள், மிட்செல் மார்ஷ் 4 ஓட்டங்கள், அஷ்டன் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அவர்கள் வெற்றி இலக்கை நெருங்கி வருவதில் சிரமப்பட்டனர்.


 ஜோஸ் இங்கிலீஷ் 55 ஓட்டங்கள், ஜிம் டேவிட் 25 ஓட்டங்கள், மேத்யூ வேட் 25 ஓட்டங்கள் எடுத்தனர். ஆனால், அவர்களால் தொடர்ச்சியான கூட்டணி அமைக்க முடியவில்லை.
மே.தீவுகள் அணிக்கு சுழற் பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

4 ஓவர்களில் 31 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். அவரது துல்லியமான பந்துவீச்சு அவுஸ்திரேலிய அணியின் ஓட்ட குவிப்பை கட்டுப்படுத்தியது.


இந்த வெற்றியுடன் மே.தீவுகள் அணி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடருக்கு நம்பிக்கையுடன் தயாராகிறது.
அவுஸ்திரேலிய அணி இந்த தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.