கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.கொழும்பு  7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நாளை(சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.கொழும்பு 2, 3 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியினுள் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.