ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய - அத்துபொந்தேன் பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டது.
இந்த போதைப்பொருள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள் அடங்கிய பொதிகளில் பாகிஸ்தானிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் அடையாளங்கள் காணப்பட்டதாக பொலிஸார தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த மாதம் 22 ஆம் திகதி, அத்துபொந்தேன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சந்தேக நபர்களுடன் 100 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.