இலங்கையில் வீணாகிய நிலையில் மீட்கப்பட்ட 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் : உலக உணவு வேலைத்திட்டத்தால் வழங்கப்பட்டவை என தகவல்



உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் சான்றளித்துள்ளதாக  உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ்  தெரிவித்துள்ளார்.
 
இந்த உணவுப் பொருட்கள் உலக உணவு வேலைத்திட்டத்தினால் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்படி அந்த பொருட்கள் தொடர்பில் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் உலக உணவு வேலைத்திட்டம் ஆகியவற்றால் வழங்கப்படும் ஆலோசனைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு ஆணையாளர் உபுல் சாந்த டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.