அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.
பிரபல பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவரான கஞ்சிபான இம்ரான் இந்த குரல் பதிவில் பேசியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
“இதைப் பற்றி பேசி வேலையில்லை, இவர்கள் பலனற்றவர்கள், இவர்கள் அரசாங்கத்திற்கும் வீட்டுக்கும் சுமையானவர்கள். கொலை செய்தோமா இல்லையா என கேட்க வேண்டாம். நாய்கள் நன்றி கெட்டவை, முன்கூட்டியே கொன்றிருக்க வேண்டும்”
“அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கிடையாது, இவர்கள் ஆட்சி செய்ய விடுகின்றார்களா, ஜனாதிபதியை இழிவுபடுத்துகின்றனர், ஜனாதிபதி பதவியில் நான் இருந்தால் இவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குத் தெரியும். இருக்கும் ஜனாதிபதி நல்லவர் என்பதனால் இவர்கள் ஆட்டம் போடுகின்றார்கள்.."
என அந்த குரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் டேன் பிரியசாத்தின் கொலை கஞ்சிபானி இம்ரான் அல்லது வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர்களினால் திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட உள்ளிட்ட பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களுக்கு எதிராக டேன் பிரியசாத் செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலகக்குழு தலைவர்களை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டேன் பிரியசாத் கடுமையாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.