விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை. அவரை கொன்றதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்,
புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டார். அவரை கொன்றதற்கான ஆதாரங்கள் தம்வசம் உள்ளன என்றார்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            