''இரண்டு மனைவிகளின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் : சோதனையில் வெளிவந்த முக்கிய ஆதாரங்கள்


ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நாவலப்பிட்டியவில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் கம்பளையில் தங்கியிருந்த மூன்று வீடுகளை பொலிஸார் சோதனையிட்டனர்.

கம்பளை, துனுகேஉல்ல வீதியில் உடகம – அங்கெலபிட்டிய பகுதியிலுள்ள வீடு, கம்பளை, தொலஸ்பாகை வீதியில் சிங்ஹாபிட்டிய பகுதியில் உள்ள வீடு என்பவற்றை சோதித்தபோதே ஐஸ் பக்கெட்டுகள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த வீடுகளில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கடந்த 25 ஆம் திகதி நாவலப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.


அவர்கள் நாவலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கணவனை 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவில் விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதி கிடைத்திருந்தது.

அதேநேரம் ஐந்து மாத கர்ப்பிணியான இரண்டாவது மனைவியை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 22 வயதான கணவரை அழைத்துக்கொண்டு, அவர்கள் கம்பளையில் தங்கி இருந்த மூன்று வீடுகளை நேற்றும் நேற்று முன்தினமும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது இரு வீடுகளில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான ஆண் இரு திருமணங்கள் செய்துள்ள நிலையில், முதல் மனைவிக்கு 15 மாத குழந்தையொன்று உள்ளமையும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கம்பளையில் இருந்து கினிகத்தேனைவரை குறித்த தம்பதியினi; ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் தங்காலை சீனி மோதர பகுதியில் போதைப்பொருளுடன்  மூன்று லொறிகள் கைப்பற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று சந்தேகநபர்கள் வழக்கு விசாரணைக்காக மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தங்காலை சீனிமோதர மற்றும் கொடெல்லாவ பகுதியில் கடந்த 22 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்  மூன்று லொறிகள் கைப்பற்றப்பட்டன. சீனிமோதர பகுதியில் இருந்த வீடொன்றிலிருந்தும் உயிரிழந்த நிலையில் இருவரது சடலங்கள், போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன. அன்றைய தினம் மாத்திரம் மேற்படி சுற்றிவளைப்புகளின் போது சுமார் 705 கிலோ கிராம் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்ததுடன் டீ-56 ரக துப்பாக்கி ஒன்றும், ரிவோல்வர் ரக 5 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

ஏற்கனவே சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த  உனகுருவே துசிதவின் இரண்டு மகன்கள் , போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொரிகளின் பதிவு செய்யப்பட்ட மூன்று உரிமையாளர்கள் மற்றும் லொரி  ஓட்டுநர் ஒருவர் என ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரு லொரிகளின் உரிமையாளர்கள், ஒரு லொறி சாரதி மற்றும் சீனிமோதர பகுதியில் இருந்து வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஒருவரது மகன் ஆகியோர்  நேற்று திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்காக தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதன்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


இதேநேரம் வெலிகமவில் கடந்த 21 ஆம்திகதி கைது செய்யப்பட்ட மோல்டோவா நாட்டவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருள் "மெபெட்ரோன்' என்ற போதைப் பொருள் என்று அரச இரசாயன பகுப்பாய்வாளர்அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த போதைப்பொருளானது ஐஸ் ரக உள்ளிட்ட போதைப் பொருட்களையும் விட மிகவும்ஆபத்தானது என கண்டறியப் பட்டுள்ளதாக தென் மாகாணசிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.

இந்தப் போதைப் பொருளானது முதல் முறையாக இலங்கை யில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

இதேநேரம் காத்தான்குடியில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின்வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் 51 கிராம் 680 மில்லிக்கிராம் ஐஸ்ஸ{டன் 30 வயதுடையபோதை வியாபாரியான இளைஞர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் மடக்கிப்பிடித்து கைதுசெய்ததுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இதேநேரம் கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் ஏஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (29) பிற்பகல் மட்டக்குளிய பொலிஸ் பிரிவின் சிறிவர்தன வீதிப் பகுதியில் முன்னெடுக்கப்பட் சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 33 கிலோகிராம் 270 கிராம் ஏஸ், 408 கிராம் ஹெரோயின், 200 போதைப்பொருள் மற்றும் 7,400 ஹெரோயின் (சரஸ்) துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மட்டக்குளிய, சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது.

விசாரணையின் போது, சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.