''எதுவும் நடக்கலாம்'' - மகிந்தவின் அறிவிப்பால் தென்னிலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு!

பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால் கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திட்டவட்டமாக அறிவித்திருந்தார். 

ஆனால் "இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது" என இன்று திடீரென கூறி தனது பாணியை மாற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய குறுகிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது,

இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தான், பொறுப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்குத் தான் காரணம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச தலைவர், பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச அரசு கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

அதனிடையே பிரதமர் மகிந்த ராஜபக்ச உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கோரிக்கையும் ஆளும் கட்சிக்குள் பெரும் புயலாக மாறியுள்ளது.

அதேவேளை எனக்குப் பதவி ஆசை இல்லை. ஆனால், என்னைக் குறிவைத்து சிலர் ஏன் பதவி விலகக் கோருகின்றனர் என்று எனக்குப் புரியவில்லை. எனினும், அவர்களின் குறுகிய கால சுயலாப அரசியல் எனக்குப் புரிகின்றது.

இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. எனினும், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு நான் பொறுப்பு அல்ல. அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்கும் நான் காரணம் அல்ல எனவும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் துயரங்களை நான் புரிந்துகொள்கின்றேன். எப்போதும் மக்கள் பக்கமே நான் நிற்பேன். மக்களின் மனநிலையை அறிந்து தான் ஒவ்வொரு கட்ட நடவடிக்கையையும் நான் எடுத்து வருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.