'அமெரிக்காவுக்கு 'பூச்சியம்' வரி விதியுங்கள்..!" : இலங்கை அரசாங்கத்துக் விரைந்த ஆலோசனை


அமெரிக்காவின் வரி அதிகரிப்பில் இருந்து எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை பாதுகாக்க அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை பூச்சியமாக்கி பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமைநடை பெற்ற சேர்பெறுமதி  சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு ஆலோசனை வழங்கிய அவர்,

அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரிஅதிகரிப்பு தொடர்பில் அவருடன் கலந்துரையாட பல நாடுகள் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளன. குறிப்பாக ஜப்பான், தென்கொரியா. ஐரோப்பிய யூனியன், அயர்லாந்து பிரதமர் என பலர் கலந்துரையாடி வருகின்றனர்.
இதன் காரணமாக வியட்நாம், இஸ்ரேல்
நாடுகளுக்கு விதித்திருந்த வரியை அமெரிக்கா தற்போது பூச்சியமாக்கி இருக்கிறது. அதேபோன்று மலேசியா, தாய்லாந்தும் இதுதொடர்பில் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கின்றன.

இந்நிலையில் இலங்கை ஒரு சிறிய நாடாக, அமெரிக்காவின் இந்த வரி அதிகரிப்பை எந்தவகையிலும் தாங்கிக்கொள்ள முடியாது. அமெரிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை எங்களால் எதிர்க்க முடியாது. என்றாலும் நாங்களும் இந்த வரியை குறைத்துக்கொள்ள
அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

அதற்காக முன்னாள் நிதி அமைச்சர் என்றவகையிலும் முன்னாள் வர்த்தக அமைச்
சர் என்ற வகையிலும் அமெரிக்காவின் பொருட்களுக்கு நாங்கள் அறவிடும் வரியை
பூச்சியமாக்கி, எமது நாட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை முற்றாக நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தற்போது எமது நாடு எதிர்கொண்டுள்ள
நெருக்கடியை தவிர்த்துக்கொள்ள அமெரிக்காவுக்கு மாத்திரம் இந்தக் கொள்கையை நாங்கள் பின்பற்றுவதாக அறிவிக்க வேண்டும்.

அதேநேரம் தொடர்ந்தும் நாங்கள் அமெரிக்காவின் வரி அதிகரி“ப்பு தொடர்பில்
கதைத்துக்கொண்டிருக்காமல் இதற்கு மாற்றுவழியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எமது பொருளாதாரத்தை அதிகரித்துக்கொள்ள வற் வரியை நூற்றுக்கு 18 வீதம்வரை அதிகரிக்க வேண்டும்.
இதன் மூலம் அனைவருக்கும் எமது பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்ய முடியும் . நல்லாட்சி அரசாங்க காலத்தில் வற் வரியை நூற்றுக்கு 18வீதம் வரை அதிக
ரித்திருந்தோம். ஆனால் கோத்தபாய ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்ததுடன் அதனை
நூற்றுக்கு 8 வீதம் வரை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார் என்றார்.

--