"நான் உத்தரவிடவில்லை" கோட்டாபய மறுப்பு! பின்னணியில் நரேந்திர மோடி

மன்னாரில் முன்னெடுக்கப்படும் மீள்புதுப்பித்தக்க சக்தி திட்டங்களை தனியார் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.

இந்த திட்டத்தை தனிநபர் ஒருவருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குமாறு நான் உத்தரவிட்டதாக தெரிவிப்பதை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என தெரிவித்துள்ள கோட்டாபய, இந்த விடயம் குறித்து பொறுப்பான தகவல்கள் வெளியாகும் என நம்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்திற்கு வழங்குமாறு உத்தரவு

"நான் உத்தரவிடவில்லை" கோட்டாபய மறுப்பு! பின்னணியில் நரேந்திர மோடி

மன்னாரில் முன்னெடுக்கப்படும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கு மாறு அரச தலைவர் உத்தரவிட்டார் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

மின்சக்தி திட்டங்களை கேள்விப்பத்திர முறைக்கு அப்பால் வழங்குவதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை என கோப்குழு இலங்கை மின்சாரசபையின் தலைவரிற்கு தெரிவித்துள்ளது.

அரச விதிமுறைகளை அறிந்தா அவர் குறிப்பிட்ட திட்டம் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார் என கோப் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய பிரதமரின் செல்வாக்கு

"நான் உத்தரவிடவில்லை" கோட்டாபய மறுப்பு! பின்னணியில் நரேந்திர மோடி

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை மின்சாரசபையின் தலைவர் இந்திய பிரதமரின் அரசியல் செல்வாக்கு காரணமாக குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடும்படி அரச தலைவர் கோட்டாபய ராயபக்ச உத்தரவிட்டார் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.