உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்ட அசாத் மௌலானவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவரை இலங்கைக்கு அழத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த நான்கு வருடங்களாக விசாரணைகளின் போது அருண ஜயசேகர தொடர்பில் எதுவும் கூறப்படவில்லை. இப்போது எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
அப்படியென்றால் முதலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச தொடர்பிலேயே முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் அவர்கள் அப்போது இவர் தொடர்பில் விசாரணை நடத்தவில்லை என்றே கேட்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும் நாங்கள் முறையாக விசாரணைகளை நடத்தி பிள்ளையான் மற்றும் இனிய பாரதி போன்றோரை கைது செய்துள்ளதுடன், அசாத் மௌலானவுடன் முழுமையான தொடர்புகளை பேணி அவரை நாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஐந்து சதத்திற்கு பிரயோசனம் இல்லாத குழுவினர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கின்றனர்.
இவர்களின் அரசியல் இந்தளவுக்கு கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளது என்பதனை எண்ணி கவலயடைகின்றோம் என்றார்.
இதற்கிடையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா, வெகுவிரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புகள் இருப்பதாக அசாத்மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் பிள்ளையானின் வேண்டுகோளின் பிரகாரம் பிள்ளையானுக்கு நெருக்க மான தான் உள்ளிட்ட குழுவொன்று இராணுவப் புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சõலேயுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டி ருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது சுவிற்சர்லாந்தில் அரசியல்புகலிடம் கோரி அங்கு தங்கியுள்ள அசாத் மௌலானா, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்சம்பவம் தொடர்பில் சாடசியமளிக்கத் தயாரெனக் கூறியிருந்த நிலையில் தற்போது அதுதொடர்பான விசாரணைகள் மீண்டும் இடம்பெற்று வருவதால் அவரை இலங்கைக்குகுட்டி வரும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைய கடும் முயற்சிகளின் பின்னர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதன் பலனாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும், அது தொடர்பில் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கவும் அசாத் மௌலானாஇலங்கை வர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.