”WWE Super star ஜான் சீனா தனது தோழியுடன் திருமணம்”…. ரசிகர்கள் வாழ்த்து

John Cena Marries Girlfriend Shay Shariatzadeh in Secret Ceremony - E!  Online - AP

WWE Super Star
ஜான் சீனாவுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர் குத்துச்சண்டை போட்டிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் கடந்த அக்டோபர் 12 ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடாவில் தனது நெருங்கிய தோழியான சாரியாடே (Shariatzadeh)என்பவரைதிருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை அமெரிக்க ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

சாரியாடே இரானில் பிறந்தவர் என்றாலும் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் ஆவார்.