Western University மாணவர் விடுதியில் நான்கு மாணவர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Western University மாணவர் விடுதியில் நான்கு மாணவர்களுக்கு COVID-19 தொற்று  உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மாணவர் விடுதியில் COVID-19 தொற்று பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Middlesex-London சுகாதார பிரிவு இந்த எச்சரிக்கையினை விடுத்திருக்கின்றது பல்கலைகழகத்தின் தகவலின் படி இந்த நான்கு மாணவர்களும் வேறு ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களும் தொடர்ந்து உணவுகளை விநியோகித்து வருவதாகவும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் ஒண்டாரியோ லண்டன் பல்கலைகழக வீட்டுவசதி இணை துணைத் தலைவர் தெரிவித்தார்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தாம் மாணவர்களின் நலன் கருதி சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மாணவர்களுக்கு தாம் எந்த நேரத்திலும் உதவ தயாராக இருப்பதாகவும் பல்கலைகழக அதிகாரி Chris Alleyne வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தார்  

Covid -19  தொற்றினால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பினை  கொண்டிருந்தவர்கள் ஒரு முன்னெச்சரிக்கையாக ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு  மாற்றப்பட்டுள்ளனர்