நேற்று நடந்த 2வது சுற்றின் 7வது போட்டியில் Boston Celtics அணியினரிடம் 92-87 என்ற புள்ளிகளின் அடிப்படையில் தோல்வி கண்டனர்
கடந்த வருடம் உலக சாம்பியன் கோப்பையை வென்ற Toronto Raptors அணியினரின் தோல்வி கனடா விளையாட்டு ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது

மிகவும் அலட்சியமாக இந்த போட்டியில் Raptors அணியினர் விளையாடியதே தோல்விக்கு காரணம் என்று விளையாட்டு விமர்சகர்கள் தமது கருத்தை தெரிவித்தார்கள்
Toronto Raptors அணியினர் சார்பில் Fred VanVleet 20, Kyle Lowry 16, Serge Ibaka 14, புள்ளிகளையும் Boston Celtics அணிக்காக Jayson Tatum 29, Jaylen Brown 21 புள்ளிகளை பெற்று Boston Celtics வெற்றிக்கு வழிவகுத்தனர்
கிழக்கு பிராந்திய இறுதி சுற்று போட்டியில் Boston Celtics அணியினர் Miami Heat
அணியினரை வரும் செவ்வாய்க்கிழமை நடக்கும் போட்டியில் சந்திக்க இருக்கின்றனர்