Sunnybrook மருத்துவமனையில் COVID-19 தொற்று பரவல்

டொரோண்டோவில் ஐந்தாவது மருத்துவமனையும்  COVID-19 தொற்று பரவலை உறுதிப்படுத்தியுள்ளது

Bayview  Eglinton, பகுதியில் அமைந்துள்ள Sunnybrook மருத்துவமனையின் சத்திர சிகிச்சை பிரிவில் ஐந்து பேருக்கு COVID-19   தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மருத்துவமனை இந்த  COVID-19 தொற்று பரவலை அறிவித்துள்ளது

அனைத்து தொற்றுகளும்  அறிகுறியற்றவை என்றும் . நான்கு நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளதாகவும் அதில் ஒருவர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும் மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது

COVID-19 தொற்று   கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன, மேலும் மருத்துவமனையின் பிற நோயாளி பராமரிப்பு பகுதிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இதனால்  ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை அறிவித்துள்ளது