St. Michael’s வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் COVID-19 தொற்று பரவல்

St. Michael’s வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் COVID-19 தொற்று பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்து

செய்வாய்க்கிழமை வரை வைத்தியசாலையில் வேலை பார்க்கும் 5 ஊழியர்களுக்கு  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும், இதனால் நோயாளிகள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் வைத்தியசாலை விடுத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது

வைத்தியசாலையின் சுகாதார பிரிவு விடுத்த அறிக்கையில் நோயாளிகளுக்கு இந்த covid 19 தொற்று பரவும் சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளது

பாதிக்கப்பட்ட எந்தவொரு ஊழியருடனும் நேரடி தொடர்பு கொண்டிருந்த  நோயாளிகளை தாங்கள் தொடர்புகொள்ள  முயற்சிகளை எடுத்துள்ளதாகவும், கடந்த இரண்டு வாரங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகை தந்த  நோயாளிகள் தங்களை தனிமை படுத்தி, Covid -19 அறிகுறிகளை கண்காணிக்குமாறும்  வைத்தியசாலையின் சுகாதார பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது