Scarborough வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

scarborough வில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை LCBO வாகன நிறுத்துமிடத்தில் நடந்த  துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்  ஒருவர் கொல்லப்பட்டார்

Danforth Avenue வுக்கும்  Victoria Park Avenue வுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது 

இந்த பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தாம் அங்கே சென்றதாகவும் அதிகாரிகள் வந்தபோது, பலத்த காயங்களால் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய வாலிபர் ஒருவரை அவசர மருத்துவ குழுவினர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதும் அவர் அங்கே இறந்து விட்டார் என பொலீசார் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்