scarborough வில் உள்ள ஒரு உயர் நிலை பாடசாலையில் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

டொராண்டோ பொது சுகாதார பிரிவு விடுத்த செய்தி குறிப்பில் Scarborough வில் உள்ள ஒரு உயர் நிலை பாடசாலையில் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துஇருக்கின்றது

இரண்டு மாணவர்களும் ஒரு ஊழியரும் Covid -19  தொற்று உறுதிப்படுத்தபட்ட நிலையில்  Scarborough  வில் உள்ள   உயர் நிலை பாடசாலையான David and Mary Thomson Collegiate Institute இல் இரண்டு 10 ம் தர மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்

பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், பாடசாலையின் அதிபர் William Papaconstantinou 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் மாணவர்கள்  பாடசாலைக்கு மீண்டும் திரும்ப முடியும் என்று தெரிவித்து இருக்கின்றார்  .

இந்த செய்தி அனைவருக்கும் கவலையை தரும் ஒரு செய்தி என்பதை எமது பாடசாலை உணர்ந்துள்ளது என்றும் ஊழியர்கள் முகமூடிகள் / முகம் மறைப்புகளை அணிய வேண்டிய அவசியம், உடல் ரீதியான தூரத்தை முடிந்தவரை பயிற்சி செய்தல் மற்றும் சரியான கை சுகாதாரத்தை ஊக்குவித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்