Scarborough வில் உள்ள உயர்நிலை பாடசாலை ஒன்றில் 13 மாணவர்களுக்கு COVID-19 தொற்று

Scarborough வில் உள்ள   உயர்நிலை பாடசாலை ஒன்றில் 13 மாணவர்களுக்கு  COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது 

Scarborough வில் அமைந்துள்ள  Lester B. Pearson Collegiate Institute உயர் நிலை பாடசாலையிலே இந்த covid -19 தொற்று பரவல் உறுதிசெய்ய பட்டதாக     டொராண்டோ மாவட்ட பாடசாலைகள்   வாரியம்(TDSB ) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஏழு ஊழியர்கள் மற்றும் 69 மாணவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது

பாடசாலைகளில் நாம் அனைத்து சுகாதார வழிமுறைகளையும்  கடைபிடிக்கின்றோம் ஆகவே இந்த கோவிட்-19  தொற்று பரவல் காரணமாக பாடசாலையை மூடவேண்டிய அவசியம் தற்போது இல்லை என டொராண்டோ மாவட்ட பாடசாலைகள்   வாரிய செய்தி தொடர்பாளர் Ryan Bird தெரிவித்தார் 

“இதற்கிடையில், சுத்தம் செய்தல், முகமூடிகள் அணிவது, சரியான கை சுகாதாரம் மற்றும் உடல் ரீதியான தூரம் போன்ற தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பாடசாலை தொடர்ந்து பின்பற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்