Scarborough வில் இரண்டு 13 வயது சிறுமிகளை காணவில்லை

Scarborough  வில் இருந்து காணாமல் போன இரண்டு 13 வயது சிறுமிகளை பொலீசார்  தேடி வருகின்றனர்

திங்கள்கிழமை காலை  Scarborough  வில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து டொராண்டோ பொலீசார் கவலை கொண்டுள்ளனர்.

இரண்டு சிறுமிகளும் கடைசியாக Bennett ரோட்   மற்றும் Lawrence அவென்யூ கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முன்பு ஒன்றாகக் காணப்பட்டதாக பொலீசார் கூறுகின்றனர்.

இரண்டு சிறுமிகளின் புகைப்படங்களையும் பொலீசார்  வெளியிட்டுள்ளனர்

Emma Ferriera  ஐந்து அடி ஏழு அங்குல உயரமும் , 120  இறத்தல்   எடையுள்ள மெலிதான தோற்றமும் ,நீண்ட அலை அலையான அடர்ந்த  பழுப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் என விவரிக்கப்படுகிறார். அவர் கடைசியாக ஒரு கறுப்பு நிற   கருப்பு Bench’ jacket, சாம்பல் நிறத்திலான தலையினை முடிய மேல்சட்டையும்  கறுப்பு நிற ஜீன்ஸ் , அணிந்திருந்தார். அவர் ஒரு சாம்பல் நிற பையுடன் கடைசியாக தன்னுடன் எடுத்து சென்றதாக  நம்பப்படுகிறது.

Lily Erner   ஐந்து அடி ஒரு அங்குல உயரம், 100 pounds   எடையுள்ளவர், மெலிதான தோற்றம்  , brown நிற நீளமான தலைமுடி  மற்றும் பச்சை நிற கண்கள் என விவரிக்கப்படுகிறார். அவர் கடைசியாக கறுப்பு , சட்டை, கறுப்பு Pants   அணிந்து கறுப்பு பையுடனும் காணப்பட்டார்

தகவல் தெரிந்த  எவரும் பொலீசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.