Scarborough பகுதி நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் மீண்டும் Covid -19 பரவல்

Scarborough பகுதியில் அமைந்துள்ள Kennedy Lodge  நீண்டகால பராமரிப்பு நிலையத்தில் அக்டோபர் 2 ம் திகதியில் இருந்து இதுவரை  COVID-19  பரவலினால்  29 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது மேலும் இந்த இல்லத்தில் இருந்த 92 பேருக்கு covid -19 தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது  

Scarborough வில் இயங்கும் மற்றும் ஒரு நீண்டகால பராமரிப்பு இல்லத்தை நடத்தும் அதிகாரி Revera இன் கருத்துப்படி Kennedy தெருவுக்கும்  Ellesmere தெருவுக்கும் இடையில் இருக்கும் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் 30 பேர் Covid -19 தொற்றுக்கு  ஆளாகியிருப்பதாகவும், 32 பேர் முழுதாக குணமடைந்துள்ளதாகவும் ,இங்கு வேலை செய்யும் 35 ஊழியர்கள் Covid -19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தார் 

டொரொன்டோ பொது சுகாதர பிரிவுடன் இணைந்து  தங்களின் சுகாதார அதிகாரிகளும் ஊழியர்களும்   தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், மேம்பட்ட சுத்தம் மற்றும் போதிய பாதுகாப்பு முறைகளை நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் மேற்கொள்வதாவும் அவர் மேலும் தெரிவித்தார் 

அனைத்து குடியிருப்பாளர்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை Covid – 19 அறிகுறிகள் தொடர்பாக  உன்னிப்பாக கவனிக்கப்படுவதாகவும், மேலும் அவர்கள் தங்கள் அறைகளில்  சுயமாக தனிமைப்படுத்தும்படி  கேட்டுக்கொள்ளப்படுவதகவும் ,அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் வேலை தொடங்குவற்கு  முன்பு நன்கு பரிசோதிக்கபட்டபின்பே கடமையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்