Scarborough பகுதியில் நேற்று இரவு நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்

Scarborough  பகுதியில் நேற்று இரவு நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்,Scarborough பகுதியில் இருக்கும் ஒரு வாடகை வீட்டினில் இந்த சம்பவம் நேற்று நள்ளிரவுக்கு முன்பு இடம்பெற்றது, சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவரை பொலீசார்  கைது செய்துள்ளனர்,நேற்று இரவு 11 .48  மணியளவில் Port Union Road , Fanfare Avenue பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து பொலீசார் அந்த பகுதிக்கு சென்றபோது படுகாயமடைந்த ஆண் இறந்துவிட்டதாகவும் காயங்களுடன் இருந்த பெண்ணை மேலதிக விசாரணைக்காக  பொலீசார் தடுத்து வைத்திருப்பதாகவும் அறியப்படுகிறது