Scarborough ஆரம்ப பாடசாலை ஊழியர்கள் வேலை செய்ய மறுப்பு Covid -19 தொற்றின் எதிரொலி

Scarborough வில் அமைந்துள்ள   Glamorgan ஆரம்ப நிலை பாடசாலை ஊழியர்கள்  அந்த பாடசாலையில்தாங்கள் வேலை செய்ய மாட்டோம் என அறிவித்துள்ளார்கள்

கடந்த வாரம் இந்த பாடசாலையில் 11 மாணவர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்படத்துடன் 58 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் ஆனாலும் பாடசாலை மூடப்படவில்லை

 அந்த பாடசாலையின் தொற்று உறுதிப்படுத்தபட்ட ஒரு பகுதியில் கல்வி பயின்ற 58 மாணவர்களும் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டதாகவும், அந்த பிரிவில் வேலை செய்தவர்கள் மற்றைய பகுதிக்கு செல்ல அனுமதிக்க படவில்லை எனவும் பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

தங்கள் பாடசாலையினை மூடி மேலதிக தற்காப்பு நடவடிக்கைளை எடுக்குமாறு பாடசாலையின் அதிபரையும் டொரோண்டோ பாடசாலைகள் சங்கத்திடமும் கோரிக்கை விடுத்தபோது அவர்கள் பாடசாலையினை மூடாததால் தாங்கள் வேலைக்கு செல்வது இல்லை என முடிவெடுத்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்

தொழிலாளர் அமைச்சின் பிரதிநிதிகள் நேரில்  வந்து வேலைக்கு செல்ல மறுத்து வரும் ஊழியர்களுடன் பேச்சுக்களை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது