Poco X3 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

Poco X3 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பட்டியல் மற்றும் நிறுவனத்தின் ட்விட்டர் இடுகை வழியாக இந்த உறுதிப்படுத்தல் வெளிவந்துள்ளது. இதன்படி, போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன், செப்டம்பர் 22 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போகோ இந்தியா பகிர்ந்த 10 விநாடி டீஸர் வீடியோ, ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தைக் காட்டுகிறது, குவாட் ரியர் கேமரா மற்றும் செல்பி கேமரா அமைப்பிற்கான பஞ்ச் ஹோல் வடிவமைப்பும் காண்பிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஈ-காமர்ஸ் இணையதளத்தில் போகோ எக்ஸ் 3 கிடைப்பதை உறுதிப்படுத்தும் விளம்பரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 என்எப்சி ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் சமீபத்தில் €199 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ. 14,620 என்ற விலையை நெருங்கும். இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் தோராயமாக ரூ. 18,290 என்ற விலையில் ஷாடோ க்ரெய் மற்றும் கோபால்ட் ப்ளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல்படி, இந்தியாவில் போகோ எக்ஸ் 3 8ஜிபி வேரியண்ட் மாடலிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் செப்டம்பர் 22ம் திகதி அறிமுகமாகும் போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ரூ. 18,999 அல்லது ரூ. 19,999 என்ற விலைக்குள் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 என்எப்சி, 6.67′ இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதத்தை ஆதரிக்கும். குவால்காமின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலியுடன், அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் வந்த உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

இந்த ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்புடன் வருகிறது, இது 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. இது அண்ட்ராய்டு 10 இல் MIUI 12.0.1 உடன் இயங்குகிறது, மேலும் இது 5160mAh பேட்டரியை 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்கிறது, இது 30 நிமிடங்களில் 62% வரை மற்றும் 65 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்ய முடியும்.

கேமராக்களைப் பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன், 13 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் 4cm மேக்ரோ சென்சார் மற்றும் முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்கான 20 மெகாபிக்சல் கேமராவைக் POCO X3 NFC கொண்டுள்ளது.