Pickering இல் வாகன விபத்து பெண் ஒருவர் பலி

இன்று காலை (Sep18)11 மணியளவில்  Pickering பகுதியில்  401 மேற்கு பெரும்தெருவில்

மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானார்

ஒன்ராறியோ மாகாண பொலிசார் கூறுகையில்,  பெரும் தெருவின் இரண்டாவது பாதையில் தரித்து நின்ற SUV வாகனத்தின் பின்புறத்தில் மற்றும் ஒரு வாகனம் மோதி தரித்து நின்ற SUV வாகனத்தினை  

50 metres முன் தள்ளியதாகவும் அதனால் SUV தீப்பிடித்து எரிந்தாகவும் அதில் பயணம் செய்த பெண்மணியே விபத்தில் பலியானதாகவும் காவல் துறையினர்  மேலும் தெரிவித்தனர்

மற்ற வாகனங்களில் இருந்த ஒருவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் இருவர் துணை மருத்துவர்களால் சம்பவ இடத்தில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. காயப்பட்டவர்களின் காயம் தொடர்பாக மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை