Oshawa வில் நடந்த திருமண நிகழ்வில் COVID-19 தொற்று

Oshawa வில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் COVID-19 தொற்று பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Durham பொது சுகாதார பிரிவின் அறிக்கையின் படி Sep 19 ம் திகதி Wentworth தெருவில் அமைந்துள்ள Caribbean Cultural Centre இல் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 8 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Durham பொது சுகாதார பிரிவு, திருமணத்தில் கலந்து கொண்டவர்களை உடனடியாக சுகாதார திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Durham பொது சுகாதார பிரிவின் அறிக்கையின் படி இந்த நிகழ்வில் சுமார் 50 விருந்தினர்கள் மற்றும் 8-10 ஊழியர்கள் மற்றும் தொண்டர் ஊழியர்கள் கலந்து கொண்டனர் என்றும் இவர்களில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
பொது சுகாதார பிரிவு அந்த பகுதியில் உள்ள இரண்டு வேலைத்தளங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது ஆனாலும் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.


டொரோண்டோ பெரும்பகத்தில் திருமண வைபவங்கள் மூலம் Covid-19 தொற்று பரவல் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதத்தில் york பிராந்தியத்தில் கலந்துகொண்ட 23 பேருக்கு Covid 19 தொற்று பரவல் உறுத்திப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.