Ontario வில் இன்று(Oct02)732 Covid-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன

Ontario வில் இன்று வெள்ளிக்கிழமை 732 COVID-19  புதிய தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன

நேற்று  வியாழக்கிழமை, Ontario மாகாணத்தில் 538 புதிய தொற்றுகள் பதிவாகி இருந்தன.

428 தொற்றுகள்  தீர்க்கப்பட்டுள்ளன என்று மாகாணம் தெரிவித்துள்ளது.

ஒண்டாரியோ சுகாதார அமைச்சர் Christine Elliott இன் கருத்துப்படி வெள்ளிக்கிழமை COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் அரைவாசிக்கு மேல்  நாற்பது  வயதுக்கு குறைந்தவர்கள் என்று தெரிவித்தார்

வெள்ளிக்கிழமை புதிய தொற்றுகளில் டொராண்டோ 323, , ஒட்டாவா 141, மற்றும் 111 பீல் பிராந்தியத்திலும்  பதிவாகி உள்ளன

40,000 க்கும் மேற்பட்ட சோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இன்றுவரை மாகாணத்தில் 52,980 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் உள்ளன என்றும் ஒண்டாரியோ சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.