Ontario மாகாண அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை கூடுகின்றது

Ontario மாகாண அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை கூடுகின்றது

குயின்ஸ் பூங்காவில் வெள்ளிக்கிழமை காலை மாகாண அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை

வியாழக்கிழமை ஒண்டாரியோவில் அதிகூடிய எண்ணிக்கையான 797  COVID-19  தொற்றுகள் பதிவானது ஒரு எச்சரிக்கை மணி ஒலி என்று சுகாதார மருத்துவ அதிகாரி Dr. David வில்லியம்ஸ் குறிப்பிட்டு இருந்தார்

மாகாண அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில்  COVID-19 பரவலை தடுக்க,தொற்று அதிகமாக பரவும் இடங்களில் என்னனென்ன நடைமுறைகள் எடுக்கப்பவேண்டும் என்று தமதுஆலோசனைகளை வழங்கியிருப்பதாக தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி Dr. Williams தெரிவித்தார்

டொரொன்டோவின் உயர்மட்ட மருத்துவர் Eileen De Villa, நகரத்தில் COVID-19 பரவுவதை குறைப்பதுக்கு  மேலும் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாகாணத்தை வலியுறுத்தியுள்ளார்.