கொவிட் தொற்றாளர் ஒருவர் கைது

tiktamil.com

கட்டுநாயக்க, வலானகொடை பிரதேசத்தில் விடுதியொன்றில் தங்கியிருந்த கொவிட் தொற்றாளர் ஒருவர் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்படவிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

நேற்றைய தினத்தில் குறித்த தொற்றாளர் தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு தப்பிச் சென்ற நபர் இன்று காலை கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

tiktamil.com