North York பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 12 வயது சிறுவன் மரணம்

கடந்த வார இறுதியில் North York பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 12 வயது சிறுவன் இன்று மரணமடைந்ததாக பொலீசார் தெரிவித்தனர்

தனது தாயாருடன் பொருட்களை வாங்குவற்காக  சென்றபோது  இரண்டு நபர்களால் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது அதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட சிறுவன் இன்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது

இந்த சம்பவத்தில் காயமடைந்த 17 வயது சிறுவனும் மற்றைய வாகனத்தில் இருந்த இரண்டு நபர்களும் இந்த சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர்

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களான 24 வயதுடைய Rashawn Chambers மற்றும் 25 வயதுடைய Jahwayne Smart ஆகியோர் பொலீசாரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மேல் கொலை குற்ற சாட்டுகள் உட்பட 28 குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 

இரண்டு குழுக்களுக்கு இடையிலான சண்டையின் நிமித்தம் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலீசார் தெரிவித்தனர்