அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகத்தின் கொள்கைகள் நிச்சயம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர்,
ரஷியாவுக்கு வடகொரியாவும் இராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. இது போரை தீவிரப்படுத்தும். இதனால், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பலன் ஏற்படாது
எங்களுடைய நிலைப்பாட்டை பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டறிந்து கொண்டார் என்றார்.
இதேநேரம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி டிரம்ப் உங்களை வலியுறுத்தினாரா? என கேட்டதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி
நாங்கள் ஒரு சுதந்திர நாடு. இந்த போரின்போது, என்னுடைய நாட்டு மக்களும், நானும், அமெரிக்காவின் டிரம்ப் மற்றும் பைடன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, டிரம்பின் தலைமையின் கீழ், போரானது விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. டிரம்பின் நிர்வாகம், விரைவான தீர்வு காண்பதில் முன்னுரிமை அளிக்கும்.
அமைதி வேண்டும் என்பதே எங்களுக்கு மிக முக்கியம். இதனால், எங்கள் மீது திணிக்கப்பட்ட அநீதியால், எங்களுடைய குடிமக்களை இழந்து வருகிறோம். போர் முடிவுக்கு வரும். ஆனால், அதற்கான சரியான திகதியை கூற முடியாது. வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகத்தின் கொள்கைகள் நிச்சயம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் என்று அவர் கூறியுள்ளார்