கொழும்பில் அமைதியின்மை - வீதிகளில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் படையினர்! |

கொழும்பில் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு - விமலதர்ம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி செல்லாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் வீதியின் குறிக்காக வழிமறித்து தடைபோட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரைத் தாண்டி முன்னோக்கி செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.