மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல் என்கிறார் உதயங்க வீரதுங்க


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,  தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளார்.

எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை (29) எட்டப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாஹர காரியவசம்   தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதியன்று, நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையகம்  நேற்று (26.07.2024) அறிவித்தது.

அத்துடன், தேர்தலுக்கான வேட்புமனுக்கள், ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம், 2024 நவம்பர் 17 அன்று முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்து.

 
அத்துடன்,ப தவியில் இருக்கும் ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்குக் குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு முன்னரும் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.