வெலிகந்த (Welikanda) பொலிஸ் பிரிவிலுள்ள நாமல்கம பிரதேசத்தில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (23) இரவு இடம்பெற்றுள்ளதுடன் மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கெப் ரக வாகனத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்ஹெங்கொடை இராணுவ முகாம் அதிகாரிகள் வழங்கிய தகவல் ஒன்றினையடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்களில் பதுளையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து போலி அடையாள அட்டை, இராணுவ சீருடைகள் மற்றும் பிரிகேடியர் அணிந்திருந்த ஆடை போன்றன மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைதானவர்கன் யக்கல, பாதுக்க, கலேவெல, மில்லவ மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரிகேடியர் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் இராணுவத்துடன் தொடர்புடையவர் அல்ல எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
அதேவேளை கைது செய்யப்பட்ட இரு இராணுவத்தினரும் திருகோணமலை ஹென்றிக் கோட்டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டு்ள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.