ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்: நால்வர் உயிரிழப்பு

ரஷ்யாவின் (Russia) ஆறு ஒன்றில் மூழ்கிய நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் பகுதியில் நேற்று (06) நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தின் போது 5 மாணவர்கள் நீரில் மூழ்கியபோதும் அதில் ஒருவர் உள்ளூர் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த அனர்த்தத்தில்18 தொடக்கம் 20 வயதிற்கு இடைப்பட்ட இரண்டு மாணவனும், மாணவிகளும் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவக் கல்வியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டதாகவும், எஞ்சியவர்களைக் காப்பாற்ற தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மாணவர்களின் உடலங்களை இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.