உணவு விலையை கேட்டு அதிர்ந்து போன சுற்றுலாப் பயணி: கடை முதலாளியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார்.

இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த சுற்றுலா பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

இது மட்டுமன்றி அண்மையில் சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு காணொளி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது