வாளை கழுத்தில் வைத்து மிரட்டி உந்துருளி பறிப்பு - யாழில் சம்பவம்

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி உந்துருளியை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இருபாலை டச்சு வீதியில் இரண்டு உந்துருளிகளில் வந்தவர்கள் வீதியில் பயணித்த ஒருவரைவழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி உந்துருளியை பறித்து சென்றுள்ளார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.