மாணவியை விடுதிக்கு அழைத்து சென்ற ஆசிரியர் - கையும் மெய்யுமாக சிக்கினார்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு - ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றிவரும் ஆசிரியரே இவ்வாறு சிக்கியுள்ளார்.

அவர் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த தனியார் தனியார் வகுப்பில், கிரான் பகுதியைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் கல்வி கற்று வந்தார்.

குறித்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவரை பாசிக்குடாவிலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றபோது கையும் மெய்யுமாக அவர் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களில் சந்தேகமடைந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள், விடுதி வரை பின்தொடர்ந்து சென்று, விடுதிக்குள் வைத்து ஆசிரியரையும், மாணவியையும் பிடித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.