சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைப்பு!

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து 50 கிலோ சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 2 ஆயிரத்து 600 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக, முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.