கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவில் இருந்து இலங்கை வந்த முதலாவது சுற்றுலா குழுவினர்!

கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து, முதலாவது சுற்றுலா குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.181 பேர் கொண்ட குறித்த சுற்றுலா சீன சுற்றுலா குழுவினர், 7 நாட்கள் இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்காய் நகரிலிருந்து சைனா ஈஸ்டன் விமான விமான சேவைக்கு சொந்தமான, எம் யூ 231 என்ற விமானத்தில் இவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.நேற்று முதல் வாரம் தோறும் ஷங்காய் மற்றும் குங்மிங் விமான நிலையங்களில் இருந்து, இலங்கைக்கு 6 விமான சேவைகளை சைனா ஈஸ்டன் விமான சேவை முன்னெடுத்துள்ளது.