மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்துவதாக ஆணைக்குழுஉறுதியளித்துள்ளது – சஜித்


அரசியலமைப்பிற்கு அமைய எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமக்கு உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின்னர் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச, நாட்டு மக்களின் இறையாண்மை மற்றும் சர்வசன வாக்குரிமையை உறுதிப்படுத்தும் செய்தியை தேர்தல் ஆணைக்குழு தமக்கு வழங்கியுள்ளது என்றார்.