இலங்கை நெருகடியில் இருந்து மீள்வதற்கு பிரித்தானியா உதவிகளை வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான பிரித்தானியாவின் திட்டம் குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் குறித்த திட்டத்தின் காரணமாக இலங்கைக்கு பெரும் நன்மைகள் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே பிரித்தானிய பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தினை அதிபர் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.