கொங்கோவில் எம்-23 கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு பொலிஸாருக்கும் நடைபெற்ற மோதலில் முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் பொதுமக்களை குறிவைத்து எம்-23 என்ற கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது.
எனவே அவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.நா.வின் அமைதிப்படை வீரர்கள் உள்பட 13 பேர் பலியாகினர்.
இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலை பகுதியிலும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது சிறை காவலர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றுள்ளது.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி அங்கிருந்த கைதிகள் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர்.
அதன்படி சுமார் 6 ஆயிரம் கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.