பிரபல ஹீரோவின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் பிரபல ஹீரோவின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இதனையடுத்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

தற்போது ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்து சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக அதர்வா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். இந்தப் படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம். 3, வை ராஜா வை படங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா இந்தப் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.