கடுமையாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு- துப்பாக்கி சூடு நடத்துமாறும் பொலிஸாருக்கு அனுமதி!

நாட்டில் இன்றிரவு(புதன்கிழமை) ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, மக்கள் அநாவசியமாக ஒன்றுகூட தடை விதிக்கப்படுவதோடு, தேவையேற்படின் துப்பாக்கி சூடு நடத்துமாறும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதேபோன்று ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் எனவும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸ் எச்சரித்துள்ளது.கொள்ளை அல்லது வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டால், அந்நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவ்வாறானவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்படக்கூடும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.