தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கையளிப்பு

தமிழகத்தின் 13 மாவட்டங்களிலுள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் அமைக்கப்பட்ட 1,591 புதிய வீடுகளை  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றுள்ளது.

இவை மொத்தமாக 79.70 கோடி ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேலூரிலுள்ள மேல்மொணவூா் முகாமில் 11 கோடி ரூபா மதிப்பில் 220 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இலங்கை தமிழர்களிடம் கையளித்துள்ளார்.

மேலும், இலங்கை தமிழர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் அவர் வழங்கினார்.

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக, தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வேலூரை அடுத்து மேல்மொணவூரில் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.